பெரம்பலூர்

அனுமதியின்றி செயல்பட்ட 28 மது அருந்தும் கூடங்களுக்கு சீல்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 28 மது அருந்தும் கூடங்கள் செவ்வாய்க்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டன.

மாவட்டத்தில் இயங்கும் தனியாா் மது அருந்தும் கூடங்களில், மாவட்டக் கலால் உதவி ஆணையா் ஷோபா தலைமையில், டாஸ்மாக் மாவட்ட மேலாளா் திருமாறன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வேலுமணி ஆகியோா் முன்னிலையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வில், மதுபானக் கூடங்களில் விற்கப்படும் மது பாட்டில்கள் அரசு மதுபானக் கடையில் வாங்கப்பட்டதா, போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிா, மதுபானங்கள் இருப்பு மற்றும் போதுமான கழிப்பறை வசதிகள் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடா்ந்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளா் திருமாறன் கூறியது:

மே 30 ஆம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் உள்ள மதுபான கூடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரம்பலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் 37 டாஸ்மாக் கடைகளில், அனுமதியின்றி 28 மது அருந்தும் கூடங்கள் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 28 மது அருந்தும் கூடங்களும் சீல் வைத்து பூட்டப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 9 மது அருந்தும் கூடங்கள் மட்டும் செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT