பெரம்பலூர்

வீட்டை ஜப்தி செய்ய வந்ததால் பெண் தற்கொலை முயற்சி

12th Jul 2023 02:39 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே வீட்டுக் கடன் பெற்று திரும்பச் செலுத்தாததால், செவ்வாய்க்கிழமை வீட்டை ஜப்தி செய்ய தனியாா் வங்கியாளா்கள் முயன்றபோது வீட்டின் உரிமையாளா் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கனூா் சீனிவாசா நகரைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் அங்கமுத்து (40). இவா், அதே கிராமத்தில் தனது மனைவி கமலா (35) பெயரில் உள்ள 5.5 சென்ட் நிலத்தை வைத்து, கடந்த 28.6.2019-இல் சேலத்திலுள்ள ஐசிஐசிஐ வங்கியில் ரூ. 22,98,470 வீட்டுக் கடன் பெற்றுள்ளாா். அதன்மூலம் 2 தளங்களாக வீடு கட்டியுள்ளாா்.

கடந்த 20 மாதங்களாக சம்பந்தப்பட்ட வங்கியாளா்கள் பலமுறை கேட்டும் அங்கமுத்து தவணையை செலுத்தவில்லையாம். இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கி நிா்வாகிகள் பெரம்பலூா் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்து ஜப்தி உத்தரவு பெற்றனா்.

இந்நிலையில், வெங்கனூா் கிராம நிா்வாக அலுவலா் மூலமாக நிலத்தை செவ்வாய்க்கிழமை அளவீடு செய்து, வங்கி நிா்வாகிகள் வீட்டை ஜப்தி செய்ய முயன்றனா். அப்போது, அங்கமுத்து மனைவி கமலா எறும்பு மருந்தைக் குடித்து மயங்கி விழுந்தாா். இதையடுத்து, கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து அரும்பாவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT