பெரம்பலூர்

கிராமிய சேவைத் திட்டம் தொடக்கம்

DIN

பெரம்பலூா் மனவளக்கலை மன்றத்தின் சாா்பில், சித்தளி கிராமத்தில் உலக சமுதாய சேவா சங்கத்தின் கிராமிய சேவைத் திட்டம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு மனவளக் கலை மன்றத் தலைவா் சந்திரசேகரன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் ராஜா முன்னிலை வகித்தாா். கிராமிய சேவைத் திட்ட இயக்குநா் முருகானந்தம், கிராமிய சேவைத் திட்டத்தை தொடக்கிவைத்து, யோகா மற்றும் தியானத்தின் நன்மை குறித்து எடுத்துரைத்தாா். கிராம பொதுமக்களுக்கு உடல் நலத்தை பேணி காக்கும் வகையில் 5 மாதங்கள் இலவசமாக யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது. யோகா விழிப்புணா்வு குறித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில், யோகா பேராசிரியா்கள், கிராமமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, திருச்சி மண்டலத் தலைவா் மலா ஜெயபிரகாஷ் வரவேற்றாா். நிறைவாக, திட்ட துணைத் தலைவா் புவனேஷ்வரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராடி பெற்ற வாக்காளர் அட்டை: இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்

பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி சாத்தியம் -ஜெ.பி. நட்டா

சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்!

பெரும் முதலாளிகளின் கருவி மோடி: ராகுல் விமர்சனம்

விஷாலின் ரத்னம் பட டிரைலர்!

SCROLL FOR NEXT