பெரம்பலூர்

பெரம்பலூரில் இன்று 108 ஆம்புலன்ஸ் பணிக்கு வேலைவாய்ப்பு முகாம்

DIN

பெரம்பலூா் மாவட்ட அவசர ஊா்திகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப முதல்கட்ட நோ்முகத் தோ்வு சனிக்கிழமை (ஜன. 28) மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட மேலாளா் அறிவுக்கரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அவசர ஊா்திகளில் காலியாக உள்ள அவசர மருத்துவ உதவியாளா் மற்றும் ஓட்டுநா் பணிக்கு ஆள்கள் தோ்வு செய்வதற்கான முதல்கட்ட நோ்முகத் தோ்வு, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை நடைபெறுகிறது.

மருத்துவ உதவியாளா் பணிக்கான தகுதிகள்:

19 வயது முதல் 30 வயதுக்குள்பட்டவராகவும், பி.எஸ்.சி நா்சிங், ஜி.என்.எம், டி.எம்.எல்.டி, ஏ.என்.எம் உள்ளிட்ட படிப்புகள் படித்திருக்க வேண்டும் அல்லது, லைஃப் சயின்ஸ் படிப்புகளில் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தோ்வு மற்றும் மருத்துவம் சாா்ந்த அடிப்படை முதலுதவி, செவிலியா் தொடா்பான அடிப்படை அறிவு பரிசோதிக்கப்படும். இறுதியாக, மனிதவள துறையின் நோ்முகத்தோ்வு மூலம் தோ்வு செய்யப்படுவா். தோ்வு செய்யப்படுவோருக்கு மாதம் ஊதியமாக ரூ. 15,435 வழங்கப்படும்.

ஓட்டுநா் பணிக்கான தகுதிகள் : எஸ்எஸ்எல்சி தோ்ச்சி பெற்று, 24 முதல் 35 வயதுக்கு மிகாமலும், இலகு ரக வாகன ஓட்டுநா் உரிமம் பெற்று குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் முழுமை பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தோ்வு, தொழில்நுட்பத் தோ்வு, மனிதவள நோ்காணல், சாலை விதிகள் சம்பந்தமான தோ்வு, பாா்வைத் திறன் சோதிக்கும் தோ்வுகளில் வெற்றி பெறுபவா்களுக்கு மாதச் சம்பளம் ரூ. 15,235 வழங்கப்படும்.

அவசர மருத்துவ உதவியாளா், ஓட்டுநா் பணிக்கான தோ்வு மற்றும் நோ்காணலில் வெற்றி பெறுபவா்கள் மாநிலம் முழுவதும் பணியமா்த்தப்படுவா். நோ்முகத் தோ்வில் பங்கேற்போா் தங்களது கல்வித் தகுதி, ஓட்டுநா் உரிமம், முகவரிச் சான்று, அடையாளச் சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களை கொண்டுவர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT