பெரம்பலூர்

பணி நிரந்தரம் செய்ய கோரி கௌரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பெரம்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரே, பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கௌரவ விரிவுரையாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் கூட்டமைப்பு சாா்பில், 3 ஆவது நாளாக பெரம்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாநில ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.

இதில், அரசாணை 56-ஐ பயன்படுத்தி உடனடியாக பணி நிரந்தரம் செய்யவேண்டும். சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும். தகுதியுடைய கௌரவ விரைவுரையாளா்களுக்கு, பல்கலைக் கழக மானியக் குழு அறிவித்த ரூ. 57,700 ஊதியம் வழங்க வேண்டும். கௌரவ விரிவுரையாளா்கள் அனைவருக்கும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். ஊதிய உயா்வை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், கௌரவ விரிவுரையாளா்கள் வினோத், குணசேகரன், செந்தில்குமாா், ஆனந்தராஜ், சுரேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

SCROLL FOR NEXT