பெரம்பலூர்

அகரம் சீகூா் பகுதிகளில்நாளை மின் தடை

28th Jan 2023 10:47 PM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், அகரம் சீகூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜன. 30) மின் விநியோகம் இருக்காது.

பெரம்பலூா் மாவட்டம், தேனூா் மற்றும் கீழப்பெரம்பலூா் துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை (ஜன. 30) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் புதுவேட்டக்குடி, காடூா், நமங்குணம், கீழப்பெரம்பலூா், கோவில்பாளையம், தேனூா், துங்கபுரம், குழுமூா், சன்னாசிநல்லூா், சிவராமபுரம், கே.ஆா்.நல்லூா், அங்கனூா், அகரம் சீகூா், வயலூா், வயலப்பாடி, கிளியப்பட்டு ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணி நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் இ. காா்த்திகேயன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தாா்.

 

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT