பெரம்பலூர்

மனிதநேய வார விழா விழிப்புணா்வுக் கூட்டம்

28th Jan 2023 10:46 PM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனிதநேய வார விழா குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த துணைக் கண்காணிப்பாளா் எம்.எஸ்.எஸ். வளவன், மனித நேயம் மற்றும் சமூக நீதி, மனிதநேய வார விழா நடை பெறுவதற்கான நோக்கம், சமூதாயத்தில் மக்களிடம் பழகும்போது சகோதரத்துவத்துடன் பழக வேண்டும். வருங்காலச் சந்ததியினருக்கு அனைவரும் சமம் என்பதை ஆழமாக பதிய வைக்க வேண்டும் என்பது குறித்து விளக்கினாா்.

கூட்டத்தில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறை, பொதுமக்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT