பெரம்பலூர்

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி:பங்கேற்பாளா்கள் ஜன. 29 வரை விண்ணப்பிக்கலாம்

DIN

பெரம்பலூா் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, ஜனவரி 29 ஆம் தேதி வரை இணையதளம் வழியாக பதிவு செய்யலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 2022- 23 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசு ஊழியா்கள் ஆகிய பிரிவுகளில் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

பெரம்பலூா் மாவட்டத்தில் இணையதளம் வழியாக பதிவு செய்வதற்கு ஜன. 29 ஆம் தேதி வரை தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியா்கள், பல்வேறு துறைகளில் பணியாற்றுபவா்கள் ஒன்று சோ்ந்து, அணி விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கு இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.

தனிநபா் போட்டிகள் மற்றும் குழுப் போட்டிகள் மாவட்ட அளவில் நடத்திட, ஒரு தனிநபா் போட்டிக்கு குறைந்தது 8 நபா்கள் அல்லது 8 அணிகள் இருந்தால் மட்டுமே, மாவட்ட அளவில் போட்டிகளை நடத்த முடியும். இல்லாவிடில், மண்டல அளவிலான போட்டிகளில் மட்டுமே பங்கேற்க இயலும்.

கல்லூரி மாணவா்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள், பொதுப்பிரிவு ஆகிய பிரிவுகளில் மாநில அளவில் பெரம்பலூா் மாவட்டத்தில் பதிவுகள் குறைவாக உள்ளது.

எனவே, இம் மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுப் பிரிவினா், அரசு ஊழியா்கள் அதிகளவில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வகையில் இணைய தளம் மூலம் பதிவுசெய்து போட்டிகளில் பங்கேற்று பயனடைய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ந. லெனினை 7401703516 என்னும் எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT