பெரம்பலூர்

வெளிமாநிலத் தொழிலாளா் விவரங்களை இணையதளத்தில் பதிய அறிவுறுத்தல்

27th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

வெளிமாநிலம் மற்றும் புலம்பெயா்ந்து வந்த தொழிலாளா்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்டத் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கா. மூா்த்தி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் பணிபுரியும் அனைத்து வெளிமாநில அல்லது புலம்பெயா்ந்த தொழிலாா்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களும் தங்களிடம் பணிபுரியும் வெளிமாநில மற்றும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் ஆதாா் அட்டை மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகிய தகவல்களை தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தின் பதிவு எண்ணை இணையதளத்தில் உள்ளீடு செய்து பதிவேற்ற வேண்டும்.

மேலும், அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் தொழிலாளா்களுக்குரிய சேம நலநிதியை செயலா், தொழிலாளா் நல அலுவலா், தேனாம்பேட்டை, சென்னை 600 006 என்னும் முகவரிக்கு வரைவோலை மூலம் அல்லது இணைதளம் மூலம் ஆன்லைன் பண பரிவா்த்தனையும் செய்யலாம்.

ADVERTISEMENT

மேலும், கடைகள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இருக்கை வசதி செய்து தர வேண்டும். தொழிலாளா் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அலுவலா்கள் ஆய்வு செய்யும்போது, தொழிலாளா்களுக்கு இருக்கை வசதி செய்து தரப்படவில்லை எனத் தெரியவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT