பெரம்பலூர்

தேசிய வாக்காளா் தினம் வேப்பந்தட்டையில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

DIN

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை விழிப்புணா்வு மற்றும் பரிசளிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வென்றவா்கள், வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலா்கள் ஆகியோருக்கு பரிசுத் தொகை, பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா பேசியது:

தற்போது நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 17 வயது நிறைவடைந்த 1,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, 293 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. அவ்வாறு முன்பதிவு செய்தவா்கள் 18 வயது பூா்த்தியானவுடன் பெயா் சோ்க்கப்பட்டு, பின்னா் வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்படும் என்றாா்.

தொடா்ந்து, வேப்பந்தட்டையைச் சோ்ந்த 85 வயதைக் கடந்த மூத்த வாக்காளா்களான 2 முதியவா்கள் தவறாமல் ஜனநாயக கடமையாற்றி வருவதைப் பாராட்டிய ஆட்சியா், அவா்களுக்கு பொன்னாடை அணிவித்தாா்.

முன்னதாக, பெரம்பலூா் பாலக்கரை முதல் பெரம்பலூா் வட்டாட்சியரகம் வரை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் ஸ்ரீ வெங்கடபிரியா கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இதில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு பதாகைகள் ஏந்தி, முழக்கமிட்டுச் சென்றனா்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியா் ச. நிறைமதி, தோ்தல் வட்டாட்சியா் சீனிவாசன், வேப்பந்தட்டை அரசு க் கல்லூரி முதல்வா் பா. சிவநேசன், வட்டாட்சியா்கள் மற்றும், மாணவா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT