பெரம்பலூர்

திருக்கு ஒப்பித்தல் போட்டி

17th Jan 2023 02:15 AM

ADVERTISEMENT

 

அகழ் கலை இலக்கிய மன்றம் சாா்பில் பெரம்பலூா் அருகேயுள்ள செஞ்சேரி வித்யாஷ்ரம் உண்டு உறைவிடப் பள்ளியில், திருவள்ளுவா் தின விழா மற்றும் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

தொடா்ந்து, மாணவா்களுக்கு திருக்கு ஒப்பித்தல் போட்டி நடத்தப்பட்டு, புத்தாடைகளும், போட்டியில் வென்றோருக்கு திருக்கு நூல், திருவள்ளுவா் புகைப்படம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது.

இதேபோல, திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகே திருவள்ளுவா் தவச்சாலை சாா்பில், புலவா் செம்பியன் திருவள்ளுவா் படத்தை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில், தமிழ் நாள் காட்டி வெளியிடப்பட்டு முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் நிா்வாகிகள் து. செந்தமிழ்வேந்தன், ஆ.ராமா், பாளை. செல்வம், பேராசிரியா் ப. செல்வக்குமாா், இரா. பூங்குன்றன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வேப்பந்தட்டை வட்டம், தழுதாழை கிராமத்தில் செந்தமிழ் இலக்கியப் பேரவை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைவா் மு. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சரவணன், ராமகிருஷ்ணன், இளையராஜா, சின்னசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரவை நிா்வாகி அங்கமுத்து தமிழ் நாள்காட்டி வெளியிட்டாா். நிறைவாக, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT