பெரம்பலூர்

பெரம்பலூா் குறைதீா் கூட்டத்தில் 273 மனுக்கள்

DIN

பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில் ஆட்சியா் க. கற்பகம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 273 மனுக்கள் அளித்தனா்.

பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் அளித்து, மனுக்கள் மீது ஒரு வார காலத்துக்குள் நடவடிக்கை எடுத்து, அதற்கான அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ. லலிதா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சரவணன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் கணபதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பொம்மி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமைதியான வாக்குப் பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாா் -ஆட்சியா்

எங்கே இருக்கிறது நோட்டா? வாக்காளா் கையேட்டில் தகவல்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 183 வழக்குகள் பதிவு

பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய ஆயுதப்படை பாதுகாப்பு

தீ விபத்து: தென்னை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT