உலகம்

மோக்கா புயல்: உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு!

19th May 2023 03:40 PM

ADVERTISEMENT

மியான்மரைத் தாக்கிய அதி தீவிர மோக்கா புயலால் இதுவரை 117 ரோஹிங்கியா மக்கள் உள்பட 145 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான ‘மோக்கா’ புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று மியான்மா் கடற்கரை பகுதியான சிட்வேக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை கரையை கடந்தது. இந்த நிலையில், மோக்கா புயலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மியான்மரின் மேற்கு மாநிலமான ரக்கைன் இந்த மோக்கா புயலினால் பெருமளவில் பாதிக்கப்பட்டது. புயலினால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாதது மற்றும் ராணுவ கட்டுப்பாடு ஆகிய காரணங்களால் இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது மெதுவாக நடைபெறுகிறது. ராணுவம் புயலினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 400-ஐக் கடந்துள்ளது எனக் கூறுவது தவறானது. கடந்த 10 ஆண்டுகளில் உருவாகிய புயல்களில் இந்த மோக்கா புயல் அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோக்கா புயலினால் பல கட்டடங்கள் தகர்ந்துள்ளன. அலைபேசி கோபுரங்கள் பல சாய்ந்தன. இந்த மோக்கா புயலில் 4 ராணுவ வீரர்கள், 24 ரக்கைன் மாநில மக்கள் மற்றும் 117 ரோஹிங்கியா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், புயலினால் இறந்தவர்களை கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புயல் குறித்து எச்சரிக்கை கொடுத்தும் மக்கள் தங்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற மறுத்ததால் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT