தமிழ்நாடு

10-ம் வகுப்பு தேர்வு முடிவு: விழுப்புரம் மாவட்டம் 90.57% தேர்ச்சி

19th May 2023 01:03 PM

ADVERTISEMENT

விழுப்புரம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் விழுப்புரம் மாவட்டம் 90.57% தேர்ச்சி பெற்றுள்ளது.

தமிழகத்தில் 10  ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றன. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் 228 அரசுப்பள்ளிகள், 5 நகராட்சி, 18 அரசு உதவி, 12 பகுதி நிதியுதவி. 8 ஆதிதிராவிட நலன், 8 சுயநிதி, 81 மெட்ரிக் மற்றும் ஒரு ஆங்கிலோ இந்தியன் என 361 பள்ளிகளிலிருந்து 12,451 மாணவர்கள், 12,232 மாணவிகள் என மொத்தமாக 24,683 பேர் பொதுத் தேர்வெழுதினர்.

இவர்களில் 10,886 மாணவர்கள், 11,470 மாணவிகள் என மொத்தமாக 22,356 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 87.43% ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 93.77% ஆகவும் உள்ளது.

ADVERTISEMENT

ஒட்டுமொத்தமாக விழுப்புரம் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 90.57% ஆக உள்ளது.

கடந்தாண்டை காட்டிலும் குறைவு: கடந்தாண்டில் விழுப்புரம் மாவட்டம் 91.99% தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், நிகழாண்டில் 1.42% குறைந்து, 90.57% தேர்ச்சி பெற்றுள்ளது.

தேர்வெழுதியவர்களும் குறைவு:

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2021-22 ஆம் கல்வியாண்டில் 24,734 பேர் தேர்வெழுதி, 22,754 பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால், 2022 - 23-ஆம் கல்வியாண்டில் 24,683 பேர் மட்டுமே தேர்வெழுதினர். இதில் 22, 356 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றனர்.

அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விவரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 228 அரசுப் பள்ளிகளிலிருந்து 7,871 மாணவர்கள், 8,526 மாணவிகள் என மொத்தமாக 16,397 பேர் பொதுத் தேர்வெழுதினர். இவர்களில் 6,619 மாணவர்கள், 7,874 மாணவிகள் என மொத்தமாக 14,493 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 84.09% ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 92.35% ஆகவும், மொத்தமாக 88.39% ஆகவும் உள்ளது.
  
வரும் கல்வியாண்டில் சாதிப்போம்: நான் ஏற்கெனவே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றிய பெரம்பலூர் மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. ஆசிரியர்களின் சிறப்பான பணியே காரணம். அது போல, வரும் கல்வியாண்டில் விழுப்புரம் மாவட்டமும் தேர்ச்சி தரவரிசைப் பட்டியலில் சிறப்பிடம் பெற தீவிரமாக உழைப்போம். எங்கு பின்தங்கியுள்ளோம் என்பதை ஆய்வு செய்து, அதற்கேற்ற திட்டமிடல்களை ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT