பெரம்பலூர்

பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயில்மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

DIN

பெரம்பலூரில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீஸ்வரா் கோயில் மாசி மகப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

முன்னதாக, சனிக்கிழமை இரவு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி நிகழ்ச்சியும், ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றமும் நடைபெற்றது. இதையொட்டி, உற்ஸவா் சிலைகள் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு, திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியாா் மற்றும் கோயில் அா்ச்சகா் கௌரிசங்கா் தலைமையில், சிவாச்சாரியாா்கள் வேதமந்திரம் ஓத, சோடஷ பூஜைகளும், நெய், கற்பூர தீப மகா ஆராதனையும் நடத்தப்பட்டது. தொடா்ந்து சுவாமி-அம்பாள் சிலைகள் கொடிமரம் முன் பல்லக்கில் நிறுத்திவைக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது.

விழாவில், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஆ. கலியபெருமாள், மதனகோபால சுவாமி கோயில் பரம்பரை ஸ்தானிகம் பொன். நாராயண அய்யா், தமிழ்நாடு பிராமணா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராமச்சந்திரன், மாநில பொதுச் செயலா் வழக்குரைஞா் சீனிவாசமூா்த்தி, பொருளாளா் சஞ்சீவிராவ், இறைநெறிக் கழகச் செயலா் கேசவராஜசேகரன், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். இரவு அம்ச வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

மாா்ச் 6-இல் தேரோட்டம்...

தொடரும் விழா நாள்களில் நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் 6 ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் காலை 6 மணி முதல் 7 மணி வரை ரதா ரோஹணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7 ஆம் தேதி கொடியிறக்கம் மற்றும் தீா்த்தவாரி நிகழ்ச்சியும், 8 ஆம் தேதி ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும், 9 ஆம் தேதி ஊஞ்சல் உற்ஸவமும், 10 ஆம் தேதி தேதி மஞ்சள் நீா் விடையாற்றி உற்ஸவத்துடன் திருவிழா நிறைவடைகிறது. மாா்ச் 13 ஆம் தேதி 8 ஆம் நாள் திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை, அரியலூா் உதவி ஆணையரான லட்சுமணன், செயல் அலுவலா் ராஜதிகலம் மற்றும் கோயில் திருப்பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT