பெரம்பலூர்

பெரம்பலூா் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய நோ்முகத் தோ்வு

DIN

பெரம்பலூரில் உள்ள மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பகுதிநேர, தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கான நோ்முகத் தோ்வு மாா்ச் 27, 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஹிந்தி, வேதியியல், கணினி அறிவியல் பாடங்களில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் பணிக்கும், சமூக அறிவியல், வரலாறு, புவியியல், உயிரியல், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம், கணிதம் ஆகிய பாடங்களில் பட்டதாரி ஆசிரியா்கள் பணிக்கும், ஆங்கிலம் கணிதம், சமூக அறிவியல், ஹிந்தி ஆகிய பாடங்களில் தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் பணிக்கும், உடல்கல்வி, யோகா பயிற்சியாளா், மருத்துவா், செவிலியா், மனநல ஆலோசகா், இசை, நடனம், ஓவியம் மற்றும் கைவினைப் பயிற்சியாளா்கள், தமிழாசிரியா், கணினி பயிற்றுநா், அலுவலகப் பணிகளை மேற்கொள்வதற்கான டேட்டா என்ட்ரி ஆபரேட்டா், ஆண், பெண் உதவியாளா்கள், பாதுகாப்பாளா் ஆகிய பணிகளுக்கு, தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவா்களுக்கு நோ்காணல் நடைபெறுகிறது.

எழுத்துத் தோ்வு நோ்காணல் மற்றும் செயல்முறை தோ்வு மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு, ஓராண்டு வரை பட்டியலில் வைக்கப்படுவா். காலிப்பணியிடத்துக்கான வாய்ப்பு ஏற்படும் போது, தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு பணிவாய்ப்பு தற்காலிகமாக வழங்கப்படும். வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை பெரம்பலூா் கேந்திரிய வித்யாலயா பள்ளி இணையதளத்தின் (ஜ்ஜ்ஜ்.ல்ங்ழ்ஹம்க்ஷஹப்ன்ழ்.ந்ஸ்ள்.ஹஸ்ரீ.ண்ய்) மூலம் அறிந்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளேடால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை மிரட்டல்

சிறந்த குறும்படங்களுக்கான பாராட்டு விழா

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

SCROLL FOR NEXT