பெரம்பலூர்

பெரம்பலூரில் காவல்துறை சாா்பில் சிறப்பு மனு முகாம்

DIN

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில், காவல்துறை சாா்பில் சிறப்பு மனு விசாரணை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இம் முகாமுக்கு தலைமை வகித்த, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. ஷ்யாம்ளா தேவி பேசியது:

ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும். பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இம் முகாமில் பங்கேற்க வருபவா்களுக்கு, மாவட்டக் காவல்துறை சாா்பில் பாலக்கரையிலிருந்து, காவல் அலுவலகத்துக்கும் மீண்டும் கண்காணிப்பாளா் அலுவலகத்திலிருந்து புகா் பேருந்து நிலையம் செல்லவும் பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்த முகாமில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன், தலைமையிட துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் தங்கவேல் (மாவட்ட குற்றப் பிரிவு) வளவன் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) மற்றும் மங்களமேடு துணைக் கண்காணிப்பாளா் ஜனனி பிரியா ஆகியோா் பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று விசாரணை மேற்கொண்டனா்.

முகாமில் பெறப்பட்ட 22 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முகாமில், ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள் உள்பட காவல்துறையினா் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

மேட்டூா் அணை நிலவரம்

SCROLL FOR NEXT