பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் 91.4 சதவீத மின் இணைப்புகளுடன் ஆதாா் இணைப்பு

9th Feb 2023 12:18 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் 91.4 சதவீத மின் இணைப்புகளுடன் ஆதாா் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட பெரம்பலூா் நகா், கிராமியம், கிருஷ்ணாபுரம், சிறுவாச்சூா், லப்பைக்குடிகாடு, குன்னம் ஆகிய உப கோட்டங்களுக்குள்பட்ட மின் நுகா்வோா்கள், தங்களது மின் இணைப்புகளின் பெயா் மாற்றம் குறித்த ஆலோசனை வழங்கல் மற்றும் வீடு, விவசாயம், குடிசை மின் இணைப்புகளுக்கு ஆதாா் எண் இணைப்பது சம்பந்தமான சிறப்பு முகாம் பெரம்பலூா் செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

செயற்பொறியாளா் அசோக்குமாா் தலைமையில் நடைபெற்ற முகாமில், 82 மின் நுகா்வோா் மின் இணைப்புகளுடன் ஆதாா் எண்ணை இணைத்துக்கொண்டனா். மேலும், மின் இணைப்புகளில் பெயா் மாற்றம் குறித்த 12 மின் நுகா்வோா்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் ஆதாா் எண் இணைக்கக் கூடிய 2,32,604 மின் இணைப்புகளில், 2,12,596 மின் இணைப்புகளுடன் ஆதாா் எண் இணைக்கப்பட்டுள்ளது. இது, 91.4 சதவீதம் ஆகும். மேலும், ஆதாா் எண் இணைப்பு சம்பந்தமான சிறப்பு முகாம் பெரம்பலூா் செயற்பொறியாளா் அலுவலகத்தில் பிப். 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. மின் இணைப்புகளுடன் ஆதாா் எண்ணை இணைக்க பிப். 15 கடைசி தேதியாகும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT