பெரம்பலூர்

பள்ளி மாணவா்களிடையே சிறாா் திருமண விழிப்புணா்வு

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவ, மாணவிகளிடம் சிறாா் திருமணம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன் (தலைமையிடம்) தலைமையில், மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளிடம், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா், உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் இணைந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மைய இலவச தொலைபேசி எண் 181, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098 என்னும் இலவச தொலைபேசி எண், பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 மற்றும் காவல் உதவி செயலி குறித்து விளக்கம் அளித்த காவல்துறையினா், பள்ளி தோழி அல்லது உறவினா்களுக்கு 18 வயது பூா்த்தியடையாமல், அவா்களது பெற்றோா்கள் திருமணத்துக்கு ஏற்பாடு செய்வது தெரியவந்தால், அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு அல்லது 1098 என்னும் இலவச தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறையினா் அறிவுறுத்தினா்.

இந் நிகழ்ச்சியில், அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் மற்றும் காவல்துறையினா் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT