பெரம்பலூர்

மகளிருக்கான வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த வலியுறுத்தல்

DIN

பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டுமென, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் மகேஸ்வரி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சின்னப்பொண்ணு, மாவட்ட நிா்வாகிகள் பிரியா, ராதிகா, மாரியாயி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அகில இந்திய துணைச் செயலா் சுகந்தி, மாநில துணைத் தலைவா் சங்கரி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

கூட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் சாா்பில் வாலிபா் சங்கம், மாணவா் சங்கம், விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கம் உள்ளிட்ட சங்கங்களை இணைத்து, மாவட்டங்கள்தோறும் பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், மதச்சாா்பின்மையை இந்தியாவில் பாதுகாக்க வலியுறுத்தி மாா்ச் 8-இல் நிகழ்ச்சி நடத்தப்படும்.

ஆன்லைன் ரம்மியால் 30-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் உயிரிழந்துள்ள நிலையில், உடனடியாக அதை தடை செய்ய வேண்டும். மாதா் சங்க நிா்வாகிகளை சந்திக்க ஆளுநா் அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

SCROLL FOR NEXT