பெரம்பலூர்

பெரம்பலூா் விதை பரிசோதனை நிலையத்தில் திருச்சி மண்டல அலுவலா் ஆய்வு

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் விதைப் பரிசோதனை நிலையத்தில் திருச்சி மண்டல விதைப் பரிசோதனை அலுவலா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பெரம்பலூரில் செயல்பட்டு வரும் விதைப்பரிசோதனை நிலையத்தில், விதைகளின் தரத்தை அறிந்திட முளைப்புத் திறன், ஈரப்பதம், புறத் தூய்மை மற்றும் பிற ரக கலப்பு ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு ஆய்வறிக்கை வழங்கப்படுகிறது.

இந் நிலையத்தில் பெறப்படும் சான்று விதை மாதிரிகள், ஆய்வாளா் விதை மாதிரிகள் மற்றும் பணி விதை மாதிரிகள் முறைப்படி ஆய்வு செய்யப்படுகின்றனவா என்பதையும், முளைப்புத்திறன் கணக்கிடும் முறைகள் மற்றும் மறு பரிசோதனை மாதிரிகள் குறித்தும், விதைப் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் கருவிகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட விதைப் பரிசோதனை அலுவலா் அறிவழகன் கூறியது:

பெரம்பலூா் விதை பரிசோதனை நிலையத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான இலக்கு 2,800 என நிா்ணயம் செய்யப்பட்டிருக்கும்பட்சத்தில், இதுவரை 769 சான்று விதை மாதிரிகள், 1,350 ஆய்வாளா் விதை மாதிரிகள், 455 பணி விதை மாதிரிகள் என மொத்தம் 2,574 விதை மாதிரிகள் பகுப்பாய்வு செய்து முடிவுகள் வழங்கப்பட்டுள்ளன.

விதைப் பரிசோதனை நிலையத்தில் 1 பணி விதை மாதிரிக்கு ரூ. 80 பரிசோதனைக் கட்டணமாக செலுத்தி பயிா் மற்றும் ரகம், குவியல் எண் ஆகியவை குறித்த விவரச் சீட்டுகளுடன், நெல் விதை 400 கிராம், உளுந்து மற்றும் நிலக்கடலை 1 கிலோ விதையை துணிப்பையில் இட்டு அனுப்பி, விதைகளை பரிசோதனை செய்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

இந்த ஆய்வின் போது, விதைப் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா் தயாமதி உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

SCROLL FOR NEXT