பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே கொலை வழக்கில் தேடப்பட்டவா் கைது

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை குன்னம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், மாக்காய்குளம் கிராமம், தெற்குத் தெருவில் வசித்து வந்த ராமச்சந்திரன் குடும்பத்துக்கும், அதே தெருவில் வசிக்கும் நடராஜன் குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந் நிலையில், கடந்த 27.8.2022-இல், ராமலிங்கபுரம் - அரியலூா் சாலையில், நடராஜன் மற்றும் அவரது உறவினா்கள் ராமச்சந்திரனை வழிமறித்து கொலை செய்தனா். இதுகுறித்து குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து, 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இவ் வழக்கில் தொடா்புடைய ராமன் என்பவா் தலைமறைவாக இருந்தாா். இவரை கைது செய்ய, மங்களமேடு காவல் நிலைய ஆய்வாளா் நடராஜன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் தேடி வந்தனா்.

பல்வேறு நகரங்களில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குன்னம் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை நடந்து சென்ற ராமனை, ஆய்வாளா் நடராஜன் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா். பின்னா், குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட ராமனை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT