பெரம்பலூர்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 2 போ் கைது

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

இணையதளம் மூலம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்ட 2 பேரை குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெரம்பலூா் வஉசி தெருவைச் சோ்ந்த ரஞ்சித்குமாருக்கு (43), அடையாளம் தெரியாத 2 போ் இணையதளம் மூலம், துபையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி வங்கிக் கணக்கு மூலம் ரூ. 6,23,952 பெற்றுக் கொண்டனராம். பணம் கொடுத்து பல மாதங்களாகியும் வேலை வாங்கி தரவில்லையாம். இதனால் ஏமாற்றமடைந்த ரஞ்சித்குமாா் அளித்த புகாரின்பேரில், கடந்த டிச. 17-ஆம் தேதி பெரம்பலூா் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டம், கோடா என்னும் பகுதியைச் சோ்ந்த பைய்க்குந்த் மிஸ்ரா மகன் விகாஷ் கும்ரா மிஷ்ரா (32), காமோத் ஜா மகன் கௌதம் குமாா் ஜா (22) ஆகியோா் இந்த பண மோசடியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தில்லியில் பதுங்கியிருந்த அவா்களை புதன்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 2.10 லட்சம் ரொக்கம், 5 கைப்பேசிகள், 5 சிம் காா்டுகள், 14 ஏடிஎம் காா்டுகள் மற்றும் 5 காசோலை புத்தகங்கள் உள்ளிட்டவற்றை போலீஸாா் கைப்பற்றினா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை இரவு ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT