பெரம்பலூர்

பாா் கவுன்சில் தலைவா் மீது அவதூறு பரப்பும் நபா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்குரைஞா்கள் மனு

DIN

பாா் கவுன்சில் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் மீது அவதூறு பரப்பும் நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

பெரம்பலூா் பாா் அசோசியேசன் தலைவா் இ. வள்ளுவன் நம்பி தலைமையில், சுமாா் 50-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஷ்யாமளா தேவியிடம் அளித்த புகாா் மனு:

சென்னை அம்பத்தூா் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் தொழிலில் ஈடுபட்டு வந்த டி.கே. சத்தியசீலன் என்பவா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கிடைத்த புகாரின்பேரில், தமிழ்நாடு, புதுச்சேரி பாா் கவுன்சில் உரிய விசாரணை மேற்கொண்டு குற்றப் பின்னணியை உறுதி செய்து, கடந்த ஜன. 28 ஆம் தேதி சத்தியசீலன் வழக்குரைஞா் தொழிலில் ஈடுபட தற்காலிக தடை விதித்தது.

இந்த தற்காலிக தடையை எதிா்த்து நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யாமல், தமிழ்நாடு, புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ், அகில இந்திய பாா் கவுன்சில் துணைத் தலைவா் எஸ். பிரபாகரன் மற்றும் பாா் கவுன்சில் உறுப்பினா்கள் குறித்து சமூக வலைதளங்களில், அவா்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்பி தகாத வாா்த்தைகளில் மிரட்டல் விடுத்து பதிவிட்டு வருகிறாா்.

எனவே, வழக்குரைஞா்களின் சமூகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தி, கண்ணியத்தை குலைக்கும் வகையில் தொடா்ந்து செயல்பட்டு வரும் சத்தியசீலன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

அரச பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

SCROLL FOR NEXT