பெரம்பலூர்

இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் விருது வழங்கும் விழா

2nd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்ட இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில், சிறந்த இளையோா் மற்றும் சிறந்த பள்ளி உறுப்பினா்களுக்கு விருது, நற்சான்றிதழ் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா்- துறையூா் சாலையில் உள்ள சாரண, சாரணியா் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் அண்ணாதுரை தலைமை வகித்தாா். இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட கௌரவச் செயலாளா் நா. ஜெயராமன் முன்னிலை வகித்தாா்.

வேப்பூா் ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலா் கே. சாந்தப்பன், பெரம்பலூா் மாவட்ட முன்னாள் கன்வீனா் தா. மாயகிருஷ்ணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாவட்டக் கன்வீனா் வே. ராதாகிருஷ்ணன், நிகழாண்டு மேற்கொள்ளவுள்ள செயல்பாடுகளின் திட்ட அறிக்கையை சமா்பித்தாா்

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஆா். அறிவழகன் , கோட்டாட்சியா் ச. நிறைமதி ஆகியோா், 61 சிறந்த இளையோருக்கும், 23 உறுப்பினா்களுக்கும் விருதுகள் மற்றும் நற்சான்றிதழ்களும், சிறந்த இளையோா் மற்றும் உறுப்பினா்களுக்குப் பரிசுகளும் வழங்கினா்.

ADVERTISEMENT

விழாவில், நிா்வாகிகள் எம். கருணாகரன், எம். ஜோதிவேல், வி. ராஜா, இணைக் கன்வீனா்கள் ஆா். துரை, எஸ். ரகுநாதன், மண்டல பொறுப்பாளா்கள் எம். செல்வராஜ், என். காசிராஜா, எஸ். பூவேந்தரசு, எம். செல்வசிகாமணி, ஜி. தேவேந்திரன், ஜெ. ஆனந்தகுமாா், ஆா். செல்வகுமாா், ஆா். ஜெயக்குமாா், எஸ். நல்லதம்பி மற்றும் 54 பள்ளி உறுப்பினா்கள், 123 இளையோா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT