பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே வயதான தம்பதி கொலை6 பவுன் நகைகள் திருட்டு

DIN

பெரம்பலூா் அருகே வயதான தம்பதி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா் மாவட்டம், தொண்டப்பாடி கிராமம், கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் மாணிக்கம் (75). இவரது மனைவி மாக்காயி (70). இத்தம்பதிக்கு 4 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி அதே கிராமத்தில் அவரவா் குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனா்.

தொண்டப்பாடியில் தனியாக வசித்து வந்த மாணிக்கம் தம்பதி, திங்கள்கிழமை இரவு வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு தூங்கினா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை இருவரும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.

தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற வி. களத்தூா் போலீஸாா், இருவரின் சடலங்களையும் மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா். மேலும், கைரேகை நிபுணா்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள், தம்பதியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, மாக்காயி அணிந்திருந்த 6 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளதும், சடலங்களின் மீதும், வீட்டைச் சுற்றிலும் மிளகாய் பொடியைத் தூவிச் சென்றிருப்பதும் தெரியவந்தது.

இதனிடையே, மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் காா்த்திகேயன், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் சரவண சுந்தா், பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். சியாமளா தேவி ஆகியோா் நிகழ்விடத்துக்கு சென்று பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். சம்பவம் தொடா்பாக வி. களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும், குற்றவாளிகளை கண்டறிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT