பெரம்பலூர்

பெரம்பலூரில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

26th Apr 2023 10:17 PM

ADVERTISEMENT

பெரம்பலூா் ஆட்சியரக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப். 28) நடைபெற உள்ளது என்று ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில், வேளாண்மை சம்பந்தமான நீா்ப்பாசனம், கடனுதவிகள், வேளாண் இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்படும்.

இந்தக் கூட்டத்தில் பெரம்பலூா் மாவட்டத்தை சோ்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT