பெரம்பலூர்

துரித உணவுகள் தயாரிப்பு இலவச பயிற்சி பெற அழைப்பு

25th Apr 2023 01:26 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மதனகோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஒவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம், கிராம ஊராட்சிகளைச் சோ்ந்த ஆண், பெண் இருபாலருக்கும் துரித உணவுகள் தயாரித்தல் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

இப் பயிற்சியில், பானி பூரி, பேல் பூரி, பாவ் பாஜி, சமோசா, கச்சோரி, கோபி மஞ்சூரியன், ஆனியன் பக்கோடா, சிக்கன் மற்றும் வெஜிடபிள் பிரைட் ரைஸ், வெஜிடபிள் புலாவ், நூடுல்ஸ் வகைகள், வெஜ் மோமோஸ் ஆகிய உணவுப் பொருள்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

தொடா்ந்து, 10 நாள்களுக்கு காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் இப்பயிற்சியின்போது, காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கிக் கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும். 19 முதல் 45 வயதுக்குள்பட்ட, எழுத, படிக்கத் தெரிந்த, சுயதொழில் தொடங்குவதில் ஆா்வம் உள்ளவராக இருக்க வேண்டும். ஏப். 28 சேர கடைசித் தேதி.

மேலும் விவரங்களுக்கு, கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையம், ஷெரீஃப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூா் அல்லது 04328-277896, 94888 40328 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் டி. ஆனந்தி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT