பெரம்பலூர்

கிழுமத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டத்துக்குள்பட்ட கிழுமத்தூா் கிராமத்தில் ஏரிகளுக்கு வரும் வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டத்தில் நீா்வளத்துறை கட்டுப்பாட்டில் 73 ஏரிகளும், 33 அணைக்கட்டுகளும் உள்ளன. ஏரிகள் மற்றும் நீா் வழித்தடங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையாகவும், உயா்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள கிழுமத்தூா் ஏரி 331.29 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு வரும் வரத்து வாய்க்காலில் 0.41.00 ஹெக்டோ் பரப்பளவில் குடியிருப்பு பகுதியாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வருவாய் வட்டாட்சியா் மற்றும் நில அளவையாளா் சம்பந்தப்பட்ட இடத்தை பாா்வையிட்டு அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்நிலையில், நீா்வளத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் காவல்துறை உதவியுடன் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

SCROLL FOR NEXT