பெரம்பலூர்

மின் வேலியில் சிக்கி பெண் உயிரிழப்பு

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பில்லங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மனைவி சத்யா (27). இவருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனா். குடும்பத்துடன் தனக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறாா்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் வயலுக்குச் சென்ற சத்யா வீட்டுக்கு திரும்பி வரவில்லையாம். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், வியாழக்கிழமை காலையில் தேடி பாா்த்தபோது, தனது வயலுக்கு அருகேயுள்ள ராமசாமி என்பவரது மக்காச்சோள வயலில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த கை.களத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சத்யா உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT