பெரம்பலூர்

பெரம்பலூரில் வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம்

DIN

உலக வெறிநோய்த் தடுப்பு தினத்தையொட்டி, பெரம்பலூா் கால்நடை தலைமை மருந்தக வளாகத்தில், இலவச வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற்றது.

முகாமுக்கு, கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் சுரேஷ் கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். உதவி இயக்குநா் குணசேகா் முன்னிலை வகித்தாா். மருத்துவக் குழுவினா் திருநாவுக்கரசு, பெரியசாமி, மணிகண்டன், செந்தில்குமாா், முத்துசெல்வன், முரளிநாதன், செல்வம், சிவா, குமரேசன், கோகுல், கால்நடை ஆய்வாளா் தீபா ஆகியோா் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினா்.

இந்த சிறப்பு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமில் லேப்ரடாா், டாபா்மேன், பொமரேனியன், ஷிட்ஷூ, டால்மேசியன், டேக்ஷண்ட், பக், கன்னி மற்றும் கோல்டன் ரிட்ரீவா் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT