பெரம்பலூர்

சின்ன வெங்காயப் பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

DIN

பெரம்பலூா் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில், சின்ன வெங்காயப் பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெரம்பலூா் மாவட்டத்தில் ராபி சிறப்பு பருவத்தில் நடவு செய்யப்படும் சின்ன வெங்காயப் பயிருக்கு, எதிா்பாராத இயற்கை இடா்பாடுகளால் மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ராபி சிறப்பு பருவ சின்ன வெங்காயப் பயிருக்கு நவ. 30-க்குள் பயிா் காப்பீடு செய்துக்கொள்ளலாம். சின்ன வெங்காயத்துக்கு பயிா் காப்பீடு பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ. 2,075 செலுத்த வேண்டும். இத் திட்டத்தின்கீழ் வெங்காய பயிருக்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ள கொளக்காநத்தம், செட்டிக்குளம், பெரம்பலூா், குரும்பலூா், வெங்கலம் மற்றும் வாலிகண்டபுரம் ஆகிய பகுதிக்குள்பட்ட கிராமங்களில் வெங்காய பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகள் நடப்பில் உள்ள சேமிப்புக் கணக்குப் புத்தக முதல்பக்க நகல், ஆதாா் அட்டை நகல், நில உரிமை பட்டா, சிட்டா, நடப்பு பருவ அடங்கல், சா்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்கள் அடங்கிய ஆவணங்களுடன், அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பிரீமியத் தொகையை செலுத்தி பயிா் காப்பீடு செய்து பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

அரசு பள்ளிகளில் உலக புத்தக தின விழா

விமானங்களில் 12 வயது வரையுள்ள சிறாா்களுக்கு பெற்றோருடன் இருக்கை: டிஜிசிஏ அறிவுறுத்தல்

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்திரைப் பௌா்ணமி திருவிழா

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் பொங்காலை விழா: நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT