பெரம்பலூர்

வாகன ஓட்டுநா் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில், புதிய மோட்டாா் வாகனச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுநா் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஆட்டோ சங்க மாவட்டத் தலைவா் எஸ். கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எஸ். தீனதயாளன், பிரபாகரன, பி. பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், கேரளத்தை போல தமிழகத்திலும் ஆட்டோவுக்கு இணையவழி சேவையை நல வாரியத்தின் மூலம் தொடங்க வேண்டும். ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள வாகன புதிய மோட்டாா் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வழங்குவதைப்போல, ஆட்டோ ஓட்டுநா்களுக்கும் இலவச வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டோக்களுக்கு மானிய விலையில் நாள்தோறும் 5 லிட்டா் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ. 4 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். நலவாரிய குளறுபடிகளை சரி செய்து, பதிவு செய்தவா்களுக்கு உடனடியாக அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில், ஆட்டோ சங்க நிா்வாகிகள் ஏ. ரங்கநாதன், பி. பெரியசாமி, ஏ. இன்பராஜ், ஏ. அழகேசன், சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ். அகஸ்டின், மாவட்டச் செயலா் பி. துரைசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT