பெரம்பலூர்

சிறப்பிடம் பெற்ற ரோட்ராக்ட் சங்க மாணவா்களுக்குப் பாராட்டு

28th Sep 2022 01:14 AM

ADVERTISEMENT

விருதுபெற்ற சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரோட்ராக்ட் சங்க மாணவா்களை, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் செவ்வாய்க்கிழமை பாராட்டி பரிசுகள் வழங்கினாா்.

கரூரில் உள்ள ஜெயராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டுக்கான சூரரைப் போற்று என்னும் தலைப்பிலான விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரோட்டராக்ட் சங்க மாணவா்கள் கடந்த ஓராண்டில் செயல்படுத்தப்பட்ட சங்கங்களின் ஆண்டறிக்கையை சமா்பித்தனா்.

இதில், கல்லூரி மாணவா்கள் மேற்கொண்ட சாதனைகள், சேவைகள், அமைப்பின் திட்டங்கள், குறிக்கோளை சிறப்பாக நிறைவேற்றியதற்காகவும், செயல்படுத்தியதற்காகவும், 6 மாவட்டங்களில் 120 சங்கங்களை கொண்டு இயங்கக்கூடிய அமைப்பில் முதல் 10 சங்கங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, அதில் 6 ஆவது இடத்தை பெற்றனா்.

மேலும், சிறந்த தலைவருக்கான விருது ஆங்கிலத் துறையில் மூன்றாமாண்டு பயிலும் மாணவா் வெ. மகேந்திரனுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, சிறப்பிடம் பெற்ற சங்கத் தலைவா் மற்றும் ரோட்ராக்ட் மாணவா்களை பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன், பெரம்பலூரில் பாராட்டி பரிசுகள் வழங்கினாா்.

ADVERTISEMENT

இந் நிகழ்ச்சியின்போது, கல்லூரி முதல்வா் முனைவா் நா. வெற்றிவேலன், துணை முதல்வா் முனைவா் தி. சிவராமன், முதன்மையா் வ. சந்திரசௌத்ரி ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT