பெரம்பலூர்

பெரம்பலூரில் இன்று வெறிநோய் தடுப்பூசி முகாம்

28th Sep 2022 01:16 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் புதன்கிழமை (செப். 28) வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

செப். 28 ஆம் தேதி உலக வெறிநோய்த் தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் பெரம்பலூா் நகரில் உள்ள கால்நடை தலைமை மருந்தக வளாகத்தில், இலவச வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இம் முகாமில், செல்ல பிராணிகள் வளா்க்கும் பொதுமக்கள் தங்களது செல்லப் பிராணிகளை கொண்டுவந்து தடுப்பூசி செலுத்தி பயனடையலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT