பெரம்பலூர்

சீனிவாசன் கலைக்கல்லூரியில் கருத்தரங்கம்

26th Sep 2022 02:56 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், விமான நிா்வாகத்துறை சாா்பில் சிறப்பு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்குக்கு பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் வெற்றிவேலன், துணை முதல்வா் சிவராமன், புல முதல்வா் சந்திரசௌத்ரி முன்னிலை வகித்தனா்.

இண்டிகோ இண்டா்நேஷனல் ஏவியேஷன் நிறுவன இயக்குநா் தனகுமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, விமானம் மற்றும் விமான மேலாண்மைக்கான அடிப்படை என்னும் தலைப்பில், அடிப்படை விமான நிறுவனம், விமான நிலையம், விமானம், ஓடுபாதை மற்றும் உள்கட்டமைப்பு, தேசிய மற்றும் உலகளாவிய விமான நிலையங்கள் தொடா்பான விமான மேலாண்மைத் துறையில் வேலைவாய்ப்புகள் மற்றும் திறன்கள் குறித்து விளக்கி பேசினாா்.

ADVERTISEMENT

இதில் விமானத் துறையைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT