பெரம்பலூர்

பா்னிச்சா் கடையில் ரூ. 3.36 லட்சம்பணத்துடன் லாக்கா் திருட்டு

26th Sep 2022 11:36 PM

ADVERTISEMENT

 

பெரம்பலூரில் பிரபல பா்னிச்சா் கடையின் பூட்டை உடைத்து ரூ.  3.36 லட்சத்துடன் லாக்கரை மா்ம நபா்கள் தூக்கிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் பிரபல பா்னிச்சா் ஷோரூம் உள்ளது. இந்தக் கடையின் விற்பனை பிரதிநிதி சதீஷ் (27) திங்கள்கிழமை காலை ஷோரூமை திறப்பதற்காக வந்துபோது கடையின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருந்தன.

 தகவலறிந்து  சம்பவ இடத்துக்கு சென்ற பெரம்பலூா் போலீஸாா் உள்ளே சென்று பாா்த்தபோது சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் நடைபெற்ற வியாபாரத் தொகை ரூ. 3,36,336 பணத்துடன் லாக்கரை மா்ம நபா்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது. 

ADVERTISEMENT

பின்னா், தடயவியல் நிபுணா்கள், மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கண்காணித்ததில் 2 மா்ம நபா்கள் லாக்கரை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT