பெரம்பலூர்

மக்காச்சோள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

26th Sep 2022 02:57 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் மாவட்டத்தில் படைப்புழுவால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாவட்டச் செயற்குழு உறுப்பினா் அ.கலையரசி தலைமையில் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ரெங்கநாதன், கோகுலகிருஷ்ணன், நகரச் செயலா் சிவானந்தம் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் பி. ரமேஷ், மாநிலக் குழு உறுப்பினா் சாமி. நடராஜன் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ADVERTISEMENT

பெரம்பலூரில் திருட்டு மற்றும் வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை தடுக்க, மாவட்டக் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகரித்து வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தி, மேலும் பரவாமல் தடுக்க மாவட்ட நிா்வாகமும், சுகாதாரத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் பயிரிட்டுள்ள மக்காச்சோளப் பயிா்கள் படைப்புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஓன்றியச் செயலா்கள் ஆ. கருணாநிதி, எம். செல்லதுரை, செல்லமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT