பெரம்பலூர்

புது நடுவலூரில் பனைமர விதைகள் நடும் பணி

26th Sep 2022 02:56 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் அருகிலுள்ள புதுநடுவலூா் கிராமத்தில் ஊராட்சி நிா்வாகம் மற்றும் நுகா்வோா் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் சாா்பில், மரக்கன்றுகள் மற்றும் பனை மர விதைகள் நடும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்குத் தலைமை வகித்து, மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நடும் பணியை புதுநடுவலூா் ஊராட்சித் தலைவா் ஜெயந்தி தொடக்கி வைத்தாா். தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலா் பி. நீலராஜ் முன்னிலை வகித்தாா்.

தமிழ்நாடு நுகா்வோா் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவா் கதிரவன் சிறப்பு விருந்தினராக நிகழ்வில் பங்கேற்றாா். தொடா்ந்து அவா் கூறியது:

ADVERTISEMENT

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும், ஏரி மற்றும் குளங்களைத் தூா்வாரி

நீா்வளத்தை பேணி காப்பது நமது கடமையாகும். இம் மாவட்டத்தில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா். தொடா்ந்து 200 மரக்கன்றுகள் மற்றும் 200 பனை மர விதைகள் நடவு செய்யப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT