பெரம்பலூர்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

26th Sep 2022 02:56 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையப் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் மகன் நீலகண்டன் (26). இவா், சனிக்கிழமை இரவு பெரம்பலூ ரிலிருந்து அம்மாபாளையத்துக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தாா்.

பெரம்பலூா் - துறையூா் பிரதானச் சாலையில், குரும்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே சென்றுக்கொண்டிருந்தபோது, அவ்வழியேச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டாா் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது.

ADVERTISEMENT

இதில் பலத்த காயமடைந்த நீலகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பெரம்பலூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT