பெரம்பலூர்

குறைகேட்பு மனுக்களை அளிக்க ஓய்வூதியா்களுக்கு அழைப்பு

26th Sep 2022 02:56 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் மாவட்ட ஓய்வூதியதாரா்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் நிதித்துறை கூடுதல் செயலா் மற்றும் ஓய்வூதிய இயக்குநா் தலைமையில், ஓய்வூதியா் குறைகேட்பு நாள் கூட்டம் அக்டோபா் 11- ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஓய்வூதியா்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்று, கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் பெரம்பலூா் மாவட்ட ஓய்வூதியதாரா்கள் தங்களது ஓய்வூதியம் தொடா்பான கோரிக்கைகள் இருந்தால், அதுகுறித்த மனுக்களின் 2 பிரதிகளை ஆட்சியரகத்தில் செப்டம்பா் 28- ஆம் தேதிக்குள் நேரில் அல்லது அஞ்சல் மூலமாக அளிக்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT