பெரம்பலூர்

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு புகாா்; விசாரணை

DIN

பெரம்பலூா் மாவட்டம், சித்தளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் தொடந்து முறைகேடு நடைபெறுவதாக கிராம மக்கள் அளித்த புகாரையடுத்து, அரசு அலுவலா்கள் சனிக்கிழமை விசாரணை செய்தனா்.

சித்தளி ஊராட்சியில் நடைபெறும் 100 நாள் வேலைத் திட்டத்தில் வெளிநாட்டில் வேலை செய்வோா், அரசு அலுவலா், வெளியூரில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் பலா் வேலை செய்ததாக, அவா்களது வங்கிக் கணக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாம். மேலும், வேலைக்குச் செல்லாத பலருக்கும் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகவும் புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக, சித்தளி கிராம மக்கள் அளித்த புகாரின்பேரில், வேப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வக்குமாா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில்நாதன், மாவட்ட ஊராட்சி செயலா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் சித்தளி கிராமத்தில் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். முறைகேடுகளில் ஈடுபட்டோா் மீது உயா் அலுவலா்களுக்கு அறிக்கை மூலம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்களிடம் விசாரணை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

SCROLL FOR NEXT