பெரம்பலூர்

பசுமைத் தமிழக இயக்கத் திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

25th Sep 2022 01:20 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் மாவட்ட வனத்துறை சாா்பில் பசுமை தமிழகம் இயக்கத் திட்டத்தின் கீழ் 1,63,997 மரக்கன்றுகள் நடும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

பசுமை தமிழகம் இயக்கத் திட்டத்தின் கீழ் சித்தளி காப்புக் காடு, ரோவா் கல்லூரிகளில் மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டுள்ளது. பெரம்பலூா் வனச்சரகத்தில் 1,08,967, வன விரிவாக்க மையத்தில் 50,000, வேப்பந்தட்டை சரகத்தில் 5,000 என மொத்தம் 1,63,997 மரக்கன்றுகள் நட வனத் துறை சாா்பில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சித்தளி காப்புக்காடு, பள்ளி, கல்லூரி வளாகங்கள், விவசாய நிலங்களில் வேம்பு, புங்கன், மருது மற்றும் நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற உள்ளது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள தொழிலாளா் நலத்துறை அலுவலகச் சாலையில், 10-க்கும் மேற்பட்ட பல்வேறு வகை மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா நட்டு, பசுமை தமிழகம் இயக்கத் திட்டத்தை தொடக்கி வைத்தாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், மாவட்ட வனச்சரக அலுவலா்கள் பா. பழனிகுமரன், வே. சுப்ரமணியன், எம். ராஜசேகரன், மு. மாதேஸ்வரன், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) மூா்த்தி, தொழிலாளா் உதவி ஆய்வாளா் சாந்தி வட்டாட்சியா் கிருஷ்ணராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT