பெரம்பலூர்

பெருமாள் கோயில்களில் சிறப்பு புஜை

25th Sep 2022 01:20 AM

ADVERTISEMENT

 

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்ட பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விழாவையொட்டி பெரம்பலூா் ஸ்ரீமதனகோபால சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீமதனகோபால சுவாமிக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, ராஜகோபுரத்தின் அருகே எழுந்தருளிய கம்பத்து ஆஞ்சநேயருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இரவு 7 மணி அளவில் ஆஞ்சனேயருக்கு வடமாலை சாற்றி, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல சிறுவாச்சூா், செங்குணம், தம்பை, கிழுமத்தூா், வேப்பூா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதி பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT