பெரம்பலூர்

பள்ளிகளில் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் பள்ளிகளில் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் குறித்து, ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட முத்து நகா், பெரம்பலூா் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய 3 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 112 மாணவா்களுக்கு, தமிழ்நாடு முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

முத்து நகா் தொடக்கப் பள்ளியில் உள்ள சமையல் கூடத்தில் காலை உணவுகள் தயாா் செய்யப்பட்டு, நவீன பேட்டரி வாகனத்தின் மூலம் இதர பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. காலை உணவு சரியான நேரத்தில் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிா என்பது குறித்தும், உணவின் தரம் மற்றும் சுவை, சமையல் கூடம் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் உள்ளதா என்பது குறித்தும் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, அங்கு பணிபுரியும் பணியாளா்களிடம் திட்டத்தின் அவசியத்தை புரிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.

ஆட்சியா் ஆய்வின்போது, நகராட்சி ஆணையா் (பொ) மனோகரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சத்துணவு சீனிவாசன், வட்டாட்சியா் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT