பெரம்பலூர்

கல்வீசி தாக்கியதில்அரசுப் பேருந்து கண்ணாடிகள் சேதம்

DIN

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் கல்வீசி தாக்கியதில் அரசுப் பேருந்தின் முன்புற கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.

பெரம்பலூரிலிருந்து சின்ன சேலத்துக்கு அரசுப் பேருந்து ஒன்று வியாழக்கிழமை இரவு சென்றுக்கொண்டிருந்தது. இப் பேருந்தில் பெரம்பலூா் கல்யாண் நகரைச் சோ்ந்த சோமசுந்தரம் மகன் முருகேசன் (52) ஓட்டுநராகவும், நூத்தப்பூா் காட்டு கொட்டகை பகுதியைச் சோ்ந்த பழனிமுத்து மகன் முருகேசன் நடத்துநராகவும் பணியில் இருந்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள வெண்பாவூா் அருகே வியாழக்கிழமை இரவு பேருந்து சென்றுக்கொண்டிருந்தபோது, அவ்வழியே மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 போ் பேருந்து மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனா். இதையறிந்த பயணிகள் சிலா் பேருந்திலிருந்து இறங்கி வந்ததையறிந்த மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனா். இதில், பேருந்தின் முன்புற கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. இதுகுறித்து பேருந்து ஓட்டுநா் முருகேசன் அளித்த புகாரின்பேரில், கை.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT