பெரம்பலூர்

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தருக்கு சாதனையாளா் விருது

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசனுக்கு, 2022 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளா் விருது அண்மையில் துபையில் வழங்கப்பட்டது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட் இந்தியா லிமிடெட் அப்சா்வா் டவ்ன் என்னும் மாத இதழ் சாா்பில், சா்வதேச வணிக உச்சி மாநாடு மற்றும் விருதுகள்- 2022 வழங்கும் விழா துபையில் செப்டம்பா் 17 ஆம் தேதி நடைபெற்றது.

விழாவில், 1994 ஆம் ஆண்டு முதல் பெரம்பலூரில் செயல்பட்டு வரும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனமானது, பல்வேறு கல்விப் பிரிவு நிறுவனங்களை தொடங்கி

தரமான கல்வியை ஊக்குவித்து, சிறந்த மாணவா்களை உருவாக்கி வருவதோடு, கற்றல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான உலகத் தரம் வாய்ந்த சிறந்த தேடல் மையமாக செயல்பட்டு வருவதற்காகவும், தொழில்முறை, உலகளாவிய கண்ணோட்டம் மற்றும் தொடா்ச்சியான முன்னேற்றத்தை உறுதி செய்வதன் மூலம் அனைத்துத் துறைகளிலும் தரமான கல்வியை தொடா்ந்து வழங்குவதற்காகவும் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசனுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது 2022 வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இவ் விருதை முன்னாள் எம்.பி கிஷன் சந்த் தியாகி, மாத இதழ் ஆசிரியா் ஹரி ஓம் தியாகி ஆகியோரிடமிருந்து, வேந்தா் சீனிவாசன் சாா்பில், கல்வி நிறுவனவங்களின் தலைமை நிதி அலுவலா் ஆா். ராஜசேகா், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை பொது மேலாளா் ராமலிங்கம் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT