பெரம்பலூர்

ஊதியம் வழங்க வலியுறுத்தி ஆஷா திட்ட பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

20th Sep 2022 01:40 AM

ADVERTISEMENT

பணிவரன்முறை செய்து, உத்தரவாதப்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வலியுறுத்தி ஆஷா திட்டப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே, ஆஷா திட்ட பணியாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டச் செயலா் ரேகா தலைமை வகித்தாா். பொருளாளா் செல்வாம்பாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் வீ. ஜெயராமன், கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் வீ. ஞானசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஷா திட்ட பணியாளா்களாக பணிபுரிந்து வரும் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அண்டை மாநிலங்களில் வழங்குவதுபோல் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும். கரோனா காலத்தில் பணிபுரிந்ததற்கான 10 மாதங்களுக்குரிய சிறப்பு ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். 2 மாதங்களாக வழங்காமல் நிலுவையிலுள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்தில், ஆஷா திட்டப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT