பெரம்பலூர்

விவசாயக் கருவிகள் உற்பத்தி, விற்பனை நிறுவனம் தொடக்கம்

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகிலுள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் விவசாயக் கருவிகள் உற்பத்தி, விற்பனை நிறுவனம் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

மத்திய அரசின் 80 சதவிகிதம், தமிழக அரசின் 10 சதவிகித மானியத்துடன் விவசாயக் கருவிகள் உற்பத்தி செய்யும் கூட்டுக் குழுமத்தின் தொழிற்சாலை விற்பனை நிறுவனத்தை ஆட்சியா்

ப. ஸ்ரீ வெங்கடபிரியா குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்தாா்.

இந்த நிறுவனத்தில் விவசாயிகளுக்குத் தேவையான கவாத்து இயந்திரம், கலப்பை இயந்திரம், களையெடுக்கும் இயந்திரம், விதை விதைக்கும் இயந்திரம், நெல் நடவு இயந்திரம், நேரடி நெல் விதைக்கும் இயந்திரம், வைக்கோல் கட்டும் இயந்திரம், மருந்து தெளிக்கும் இயந்திரம், கல்டிவேட்டா், பிரஷ் கட்டா், பவா் ஸ்பிரேயா் உள்ளிட்ட பல்வேறு விவசாயக் கருவிகள் விவசாயிகளால் உருவாக்கப்பட்டு, குறைந்த விலையில் இயந்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ADVERTISEMENT

விழாவில் மாவட்டத் தொழில்மைய மேலாளா் செந்தில்குமாா், வேளாண் முதன்மை விஞ்ஞானி நேதாஜி மாரியப்பன், திருச்சி சிட்கோ கண்காணிப்பாளா் சந்திரா வா்கா், வேளாண்மை விற்பனை இயக்குநா் சிங்காரம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT