பெரம்பலூர்

பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

10th Sep 2022 03:59 AM

ADVERTISEMENT

கும்பகோணத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் எஸ். சுவாமிநாதனை, கடந்த 2 நாள்களுக்கு முன்பு அரியலூா் அருகே மா்ம நபா்கள் சிலா் வெட்டி கொலை செய்தனா்.

இந்தச் செயலைக் கண்டித்தும், இச் சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகளை கைது செய்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்ற வழக்குரைஞா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், வெள்ளிக்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதன்படி, பெரம்பலூா் பாா் அசோசியேசன் சாா்பில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், வழக்காடிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT